நுங்கம்பாக்கத்தில் காவலாளி கொலை... குடிபோதையில் கொன்ற கொலையாளி கைது
சென்னை: நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் சக ஊழியரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த காவலாளி கைது செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன்பாகவே, அதே பகுதியில் கொலை நடந்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவன மென் பொறியாளர் சுவாதி நேற்று காலையில் மர்மநபர் ஒருவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில், ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை நேரில் பார்த்தவர்கள் அவனைப் பற்றிய அடையாளத்தை கூறினாலும் போலீசாரால் இன்னமும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

கொலை நடந்த 24 மணி நேரத்திற்கு முன்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் மேலும் ஒரு கொலை நடந்துள்ளது. காவலாளிகளுக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி அது கொலையில் முடிந்துள்ளது. சக ஊழியர் ரமேஷ் என்பவரை பழனி என்பவர் கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தியால் குத்தியதில் ரமேஷ் உயிரிழந்தது தெரியாமல் அங்கே பழனி உறங்கியுள்ளார். காலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமேஷை பார்த்து அதிர்ச்சிடைந்தவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications