வன்முறை, வெறி பேச்சு.. கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீஸ் வழக்கு .. கைதாவாரா?
நடிகர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16-ம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

அதிர்ச்சியூட்டிய கருணாஸ்
அப்போது எடப்பாடி பழனிசாமியே தான் அடித்துவிடுவேன் என்பதால் பயந்தார் என்றும், கூவத்தூரை அடையாளம் காட்டியவனே தான் தான் என்றும் பேசி அனைவரையும் அதிர்ச்சியூட்டினார்.

கருணாஸ் விடுத்த சவால்
மேலும், காவல்துறை அதிகாரி அரவிந்தனுக்கு சவால் விடுத்த கருணாஸ், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்திருந்தார். இதெல்லாம் போதாதென்று சாதி ரீதியாகவும் சில கருத்துக்களை எக்குத்தப்பாக பேசியிருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு
அவரது பேச்சு ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், கொலை செய்யத் தூண்டும் வகையிலும் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வரையே அடிப்பேன் என்ற ரீதியில் அவர் பேசியது தமிழக அரசுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது கருணாஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யூ-டியூப் ஆதாரங்கள்
தமிழக முதலமைச்சர், காவல் துறை அதிகாரியை அவதூறாக பேசிய விவகாரத்தில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் கருணாஸ் பேசிய வீடியோ யு-டியூப்பில் வெளியான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications