கேட்டது 5000 லஞ்சம்.. ரூ.3,000 தான் இருப்பதாக சொன்ன கர்ப்பிணியின் கணவர்.. அடிக்க ஓடிவந்த செவிலியர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் நடந்த பிரசவத்துக்கு செவிலியர் 5,000 லஞ்சம் கேட்டதாகவும்.. 3,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக கர்ப்பிணி பெண்ணின் கணவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் அவதூறாக பேசி செவிலியரால் அடிக்க பாய்ந்ததாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அரசு மருத்துவமனைகளை பொறுத்தவரை ஏழைகள் சிகிச்சைக்காக வருவார்கள். குறிப்பாக பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகளை தான் பலர் வருகிறார்கள். அப்படி வரும் ஏழை மக்களிடம் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. பிரசவ மருத்துவமனைகளில் நுழைந்தாலே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை பல இடங்களில் உள்ளது.

லஞ்சம் கொடுத்தால் தான் ஸ்டிரெச்சர் தள்ளுவார்கள், நல்லஇடத்தில் படுக்கை வசதி கொடுப்பார்கள், சிகிச்சையின் போது அலட்சியம் காட்டாமல் பணியாளர்கள் இருப்பார்கள், என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. வார்டு பாய், ஆயா, செவிலயர் என ஒவ்வொரு பணியாளர்களும், ஒவ்வொரு வேலைக்கும் லஞ்சம் கேட்பதும் தொடர்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் முன்பு போல் பிரசவத்திற்கு வரும் பெண்கள் கவனிக்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. அப்படி கவனிக்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற புகார்கள் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் வரை லஞ்சத்திற்கே செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் நடந்த பிரசவத்துக்கு செவிலியர் 5,000 லஞ்சம் கேட்டாராம். ஆனால் 3,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக கர்ப்பிணி பெண்ணின் கணவர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் அவதூறாக பேசி அடிக்க செவிலியரால் அடிக்க பாய்ந்தாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கர்ப்பிணி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உள்ளனர். அதேபோல் ஆவேசத்துடன் செவிலியரும் அவர்களிடம் பேசுகிறார்.. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து செவிலியர் சண்டை போடுவதற்கு ரெடியாகுவதாக வீடியோ உள்ளது.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் செவிலியரை கண்டித்து கொதித்து பேசி வருகிறார்கள்.. சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இதுபோன்ற செவிலியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதனிடையே எல்லா மருத்துவமனையிலும் அரசு உள்ளே சென்று கவனிக்க முடியாது என்பது உண்மை. ஆனால் இதுபோல வரும் புகார்களுக்காவது உரிய நடவடிக்கை எடுத்தால் இது போல் செய்ய நினைக்கும் மற்றவருக்கு பயம் வரும் என்று நெட்டிசன் ஒருவர் கூறினார்.
மணிகண்டன் என்பவர் வெளியிட்ட ட்விட் பதிவில், எங்கள் ஊராட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடை பெற்றதே இல்லை.. லஞ்சத்தில் தன் குழந்தையின் பிரசவம்.அந்த தாயின் பிரசவத்தின் வலியை விட லஞ்சத்தின் வலி மிகவும் கொடுமையானது... என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், லஞ்சம் வாங்காத அரசு அலுவலம் அப்படின்னு எதுவுமே இல்ல போல இருக்கு... இரண்டு நாளைக்கு முன்னாடி குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகம் சென்றிருந்த்தேன் அங்கு லஞ்சம் இல்லாமல் அணுவும் அசைய வில்லை. எல்லா ஆபிஸ்ற்கும் அங்கு அங்கு பணம் வாங்க ஆட்கள் உள்ளனர் என கூறியுள்ளார். இதேபோல் பலரும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications