மதுரையில் நர்சிங் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கொலை
மதுரை: மதுரை அருகே நர்சிங் கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை பூனையூர் சிந்தாமணியை சேர்ந்த 18 வயது மாணவி, தனியார் நர்சிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கல்லுாரி முடிந்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தார். ஆடுகளை வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர், மாணவி ஆடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்திற்கு தேடிச்சென்றுள்ளனர்.

ஆடுகள் மட்டும் தானாக மேய்ந்து கொண்டிருக்க மாணவியின் உடல் முட்புதருக்குள் கிடந்துள்ளது. அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சிலைமான் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதாரி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களால் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், அவற்றில் பணிபுரியும் நபர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டார்களா என்பது குறி்த்து விசாரித்து வருகின்றோம் என்று போலீசார் கூறி வருகின்றனர்.
அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், மாணவியை முள்காட்டிற்குள் துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். வெளியில் தெரிந்தால் விபரீதம் ஆகும் என நினைத்து அவர் கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பினர். எஸ்.பி., விஜயேந்திரபிதரி விசாரணை நடத்தினார். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications