சசிகலாவுக்கு எதிர்ப்பு: ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் திடீர் தியான "தர்ணா" போராட்டம்!
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரையில் அமர்ந்து 30 நிமிடங்களுக்கும் மேலாக தியானம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்மூடி தியானம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து திடீர் தியானம் செய்தார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். திடீர் தியானத்தில் உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை அடுத்து டிச.5-ம் தேதி நள்ளிரவில் முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்றார். நாளை அல்லது நாளை மறுநாள் சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் பன்னீர்செல்வம் மவுன புரட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications