அங்கிட்டு சசிகலா விமர்சிக்க... இங்கிட்டு ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்... மன்னார்குடி கேங் ஷாக்
திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சசிகலாவின் பெயரில் அறிக்கை வெளியானது. அதே நேரத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்திருப்பது மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம், சசிகலா இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தில் இருக்கிறது. என்னதான் சசிகலா காலில் பன்னீர்செல்வம் விழுந்தபோதும் மன்னார்குடி கோஷ்டி அவரை ஏற்க மறுத்து கொண்டிருக்கிறது.

ஓபிஎஸ்-க்கு வாக்குறுதிகள்
இதனால் அரசியலைவிட்டே ஒதுங்கும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்திருந்தார். அப்படி ஓபிஎஸ் ஒதுங்கினால் திமுக அவரை வளைத்துவிடும் என அஞ்சி மன்னார்குடி கோஷ்டி ஓபிஎஸ்-க்கு வாக்குறுதிகளை அள்ளி தருகிறது.

சசிகலா பெயரில் அறிக்கை
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலினை விமர்சித்து சசிகலாவின் பெயரில் கையெழுத்திடாத அறிக்கை ஒன்று நேற்று வெளியானது. அந்த அறிக்கை வெளியானது சசிகலாவுக்கே தெரியுமா என்பது அவருக்கே வெளிச்சம்.

ஸ்டாலினுக்கு வாழ்த்து
சசிகலா பெயரில் அறிக்கை வெளியான அதே நேரத்தில் தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது ஸ்டாலினுடன் புன்னகை பூத்த முகமாக பேசிக் கொண்டிருந்த ஓபிஎஸ், திமுக செயல் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

அதிர்ச்சியில் மன்னார்குடி கோஷ்டி
இது உடனிருந்த அமைச்சர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தகவல் உடனே போயஸ் கார்டனுக்கு பாஸ் செய்யப்பட்டதாம். நாம நினைத்ததுபோல ஸ்டாலினுடன் இப்பவே நெருக்கம் காட்டுகிறாரே ஓபிஎஸ் என மன்னார்குடி கோஷ்டி மீண்டும் முருங்கைமரத்தில் ஏறி முறுக்கிக் கொண்டு நிற்கிறதாம்.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications