''ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோமாளி''! கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர்!வெடித்த சர்ச்சை!
கள்ளக்குறிச்சி: ஓ.பன்னீர்செல்வத்தை கோமாளி என்றும் பைத்தியம் என்றும் விமர்சித்து கள்ளக்குறிச்சி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் யார் பெரியவர் என்ற அதிகார மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து சட்டப்போராட்டம் மூலம் குடைச்சல் கொடுத்து வருகிறார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் டீமில் இருந்து பலரும் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்கள்.
ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகுவதால் ஓ.பி.எஸ். கூடாரம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. இருப்பினும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக அதிமுகவில் உரிமை கோரி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒன்றில்,
''கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!! நாகரீக கோமாளி ஓ.பன்னீர்செல்வம் பைத்தியத்தை கண்டிக்கிறோம். ஒன்றரை கோடி கழக தொண்டர்கள், 2504 கழக பொதுக்குழு உறுப்பினர்கள், ஏகமனதோடு ஓ.பன்னீர்செல்வத்தை கழக அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவியை நீக்கியும் கழகமும் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உறுதி செய்தும் OPS கோமாளியே! இரைட்டை இலை சின்னத்தை பற்றி பேச உனக்கு எந்த தார்மீக உரிமையும் தகுதியும் இல்லை பைத்தியமே!'' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிமுகவில் கடந்த சில நாட்களாக போஸ்டர் யுத்தங்கள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் இப்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனிடையே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆட்கள் போஸ்டர் ஓட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications