சட்டசபை இன்று கூடுகிறது.. வரிந்து கட்டும் எதிர் கட்சிகள்... முக்கிய பிரச்சனைகளை எழுப்ப திட்டம்!
சென்னை: தமிழக சட்டசபையின் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். இதனிடைய சுவாதி கொலை வழக்கு, டாஸ்மாக் விவகாரம், பாலாறு பிரச்சனை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை கிளப்பவும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து, 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், கடந்த ஜூன் 16-ம் தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கி 23-ம் தேதி வரை நடந்தது. பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடருக்காக சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17ம் நிதியாண்டுக்கான முழுமை யான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவச கைபேசி, ஸ்கூட்டர் மானியம் உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பால் விலையை குறைப்பது, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவது, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது போன்றவை இடம் பெறலாம். அதேநேரத்தில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் பெரும்பாலும் பட்ஜெட்டில் இடம் பெறாது என்றும், 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதாவே வெளியிடுவார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக் கமிஷன் ஊதியம் அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7வது சம்பளக் கமிஷன் ஊதியம் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அது குறித்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிட வாய்ப்புள்ளது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும், அடுத்த இடத்தில் உள்ள காங்கிரசும் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளன. திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் பிடிபட்ட ரூ.570 கோடி விவகாரம், சுவாதி கொலை, மீனவர்கள் பிரச்சனை, திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட பிரச்சனை, குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொடூர கொலைகள் மற்றும் கூலிப்படையினரின் அட்டகாசம் உள்பட பல பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளன.
அதே போல், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தும் என கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பல லட்சம் மக்களுக்கு இன்னும் நிவாரண உதவி கிடைக்காதது உள்ளிட்ட விவகாரங்களும் எழுப்பப்படும்.
மேலும், பிரதான எதிர்கட்சியான திமுக வெளிநடப்பு செய்யப்போவதில்லை அவையில் இருந்து கொண்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க போவதாக ஏற்கனவே கூறியுள்ளது. இதனால், இந்த கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications