For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவுக்கு எதிராக களத்தில் குதித்த ஓபிஎஸ்! 31 எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை!!

சசிகலாவுக்கு எதிராக களத்தில் குதித்த ஓபிஎஸ்! 31 எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை!!

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டி வரும் இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இப்போது கலகக் குரல் எழுப்ப தயாராகிவிட்டார். அதிமுகவின் 31 எம்.எல்.ஏக்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் தரப்பு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வத்தை உட்கார வைத்தது மத்திய அரசு. சசிகலா தரப்பின் நெருக்கடிகளுக்கு இடையே மத்திய அரசு மற்றும் திமுகவின் அமோக ஆதரவுடன் முதல்வர் நாற்காலியில் தொடர்ந்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

திமுக, மத்திய அரசு அதிர்ச்சி

திமுக, மத்திய அரசு அதிர்ச்சி

சசிகலா தரப்பு நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்த நிலையில் வேறுவழியில்லாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம். இது மத்திய அரசு மற்றும் திமுகவை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்தது.

தமிழகம் கொந்தளிப்பு

தமிழகம் கொந்தளிப்பு

சசிகலா அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னமும் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கொடுக்கவில்லை. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

தாமதப்படுத்தும் மத்திய அரசு

தாமதப்படுத்தும் மத்திய அரசு

இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வந்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை முன்வைத்து சசிகலா பதவியேற்பை தாமதப்படுத்துகிறது மத்திய அரசு.

எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை

எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை

தற்போது மத்திய அரசும் திமுகவும் நெருக்கடி தரத் தொடங்கியிருப்பதால் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு கலகக் குரல் எழுப்ப தயாராகிவிட்டாராம். அதிமுகவில் உள்ள 31 எம்.எல்.ஏ.க்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் தரப்பு தொடங்கியுள்ளதாம்.

சசிக்கு எதிராக...

சசிக்கு எதிராக...

ஓபிஎஸ் அணியும் திமுகவும் கைகோர்த்து ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கலாம்.. அப்படி செய்தால் சசிகலா முதல்வராவதைத் தடுத்துவிட முடியும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம் என்கின்றன டெல்லி தகவல்கள்.

English summary
ADMK Sources said that O Panneerselvam started talks with rebel MLAs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X