அப்பல்லோவுக்கு அமைச்சர் ஓ.பி.எஸ். வந்தவுடன் புறப்பட்ட தம்பி !
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று மாலை வந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி இரவு உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 நாட்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகம் இதுவரை 5 செய்திக் குறிப்புகளை வெளியிட்டு ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும் வழக்கமான உணவு உட்கொள்வதாகவும் கூறி வருகிறது. கடந்த 13 நாட்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், அவரின் ஆயுள் அதிகரிக்கவும் வேண்டி அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், மற்ற கட்சி தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மாலை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா வந்திருந்தார். சுமார் அரை மணி நேரம் உள்ளே இருந்தார். இரவு 7 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் வந்தவுடன், ஓ.ராஜா உடனே வெளியே சென்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications