ஒரு ரைடா.. ரெண்டு ரைடா.. 3 ரைடா.. என்னத்த சொல்ல.. ஓ எஸ் மணியன்
மயிலாடுதுறை: ஒரு ரைடா, இரண்டு ரைடா, மூன்று ரைடா தொடர்ந்து சோதனை செய்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் வடகரையில் இளையாளுர் ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல் அன்சாரியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர்
தொடர்ந்து சிறப்பு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஆம்புலன்ஸ் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் தற்போது முதலமைச்சராகவும் உள்ள மு.க.ஸ்டாலின் மழையால் ஏற்பட்ட குருவை சாகுபடி பாதிப்புகளை பார்வையிட்டார்.

பயிர்கள்
இதையடுத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 50 ஆயிரம் வீதம் அரசு இழப்பீடு தர வேண்டும் என அப்போது வலியுறுத்தி இருந்தார். ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான கிராமங்கள் நிவாரணத் தொகை வழங்குவதில் விடுபட்டு பூஜ்ஜியம் எனக் குறிப்பிட்டு இழப்பீடு இல்லை என்று தெரிவித்திருப்பது விவசாயிகளிடையே மிகுந்த வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.

விவசாயிகள்
இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் அறுவடை பரிசோதனை செய்தால் கண்டிப்பாக அது வெளிப்படைத்தன்மையாக இருக்கும். 100 சதவீத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கையாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து கேள்வி கேட்டபோது ஒரு ரைடா, இரண்டு ரைடா, மூன்று ரைடா தொடர்ந்து சோதனை பண்ணிக்கொண்டு இருப்பதாகவும் , அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

உச்சநீதிமன்றம்
அஇஅதிமுக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் பெற்று ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என நியமனம் பெற்று தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் அங்கீகாரம் பெற்று நாடாளுமன்ற தேர்தல் , சட்ட மன்ற தேர்தல் என பல தேர்தல்களில் எதிர்கொண்டுள்ளதாகவும் , எனவே கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை எனவும் கூறினார். சசிகலா மீது அதிமுக வழக்கு தொடரவில்லையே என்பது குறித்த கேள்விக்கு 72 மணி நேரம் தான் ஆகியிருக்கிறது என அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications