ஓகி புயல்... குமரி நிவாரண பணிகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை: தென் தமிழகத்தையே புரட்டி போட்ட ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்தையே பாடாய் படுத்திவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் இல்லாமலும் இடுப்பு அளவு தண்ணீரிலும் மக்கள் தத்தளித்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகள் குறித்து அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்பை அடுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன, ஓகி புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்னென்ன ஆகியன குறித்து வரும் 7-ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications