ஐயோ அது என் குரல் இல்லை.. யாரோ எடிட் பண்ணிட்டாங்க.. பல்டி அடித்த எச்.ராஜா!
போலீஸ் மற்றும் நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் பேசியதாக வந்த வீடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்று எச்.ராஜா புதிய விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: போலீஸ் மற்றும் நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் பேசியதாக வந்த வீடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்று எச்.ராஜா புதிய விளக்கம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் போலீஸ் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.
அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார்.
வீடியோ
மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது. எச்.ராஜா பேசியது மொத்தமும் வீடியோவாக வெளியாகி உள்ளது. இதில் அவர் நீதிமன்றத்தை கெட்ட வார்த்தையில் பேசினார். போலீஸ் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். மத கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார்.

குரல் கிடையாது
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் (நியூஸ்7) கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா ''அந்த வீடியோவில் இருப்பது என் குரல் இல்லை. யாரோ என்னை போல பேசி இருக்கிறார்கள். நான் அதை பேசவில்லை'' என்று வைரல் வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

எடிட் செய்யப்பட்டது
மேலும் காவல், நீதித்துறைகளை மிரட்டும் தொனியில் நான் பேசவில்லை. நான் பேசியது போல வெளிவந்துள்ள வீடியோ எடிட் செய்யப்பட்டது. யாரோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். எனக்கு எதிராக செயல்படும் சிலர் திட்டமிட்டு செய்த செயல் இது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே இப்படித்தான்
எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய விஷயங்களை பேசிவிட்டு பின் அதில் இருந்து பின் வாங்குவது புதிய விஷயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல முறை தவறான கருத்துக்களை பேசிவிட்டு, அட்மின் பேசியது இது என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த முறை அந்த குரலே என்னுடையது கிடையாது என்று கூறியுள்ளார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
சில்லுண்டிகளை வச்சிக்கிட்டு? தவெக விஜய் அரசை துவம்சம் செய்த எச்.ராஜா.. அண்ணாமலைக்கும் விழுந்த செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications