ஓடும் காரில் பெண் டாக்டரை பலாத்காரம் செய்ய முயற்சி.. சென்னையில் பரபரப்பு சம்பவம் #ola
சென்னை: சென்னையில் கால் டாக்சியில் பெண் மருத்துவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த அந்த பெண் மருத்துவருக்கு வயது 26. அண்ணா நகர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்கு செல்வதற்காக ஓலா கால் டாக்சிக்கு பதிவு செய்து வரவழைத்து காரில் புறப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விஜிபி அமைதி கோயில் அருகே கார் நிறுத்தப்பட்டது. காருக்குள் 2 நபர்கள் ஏறியுள்ளனர். அப்போது அதிர்ச்சியாகி கால் டாக்சி ஓட்டுநரிடம் கேட்க, அவர்கள் இருவரும் தனது நண்பர்கள் என்றும் சிறிது தூரத்தில் இறங்கிவிடுவார்க என்றும் கூறியுள்ளார் டிரைவர்.

இதில் சந்தேகம் அடைந்த பெண் மருத்துவர் அதே பகுதியில் உள்ள தனது நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே காரை வேகமாக இயக்கி, வேறு திசைக்கு திருப்பியோடு, அந்த பெண் மருத்துவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
அதிவேகமாக சென்ற காரில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் அந்த கால் டாக்சியை விரட்டிச் சென்று நீலாங்கரை அருகே மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது. பெண் மருத்துவரின் நண்பரும் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்ததால், ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து கால் டாக்சி டிரைவர் வெங்கடேசனை கைது செய்தனர். மற்ற இருவரும் தப்பியோடியுள்ளனர்.
போலீசார் விசாரணையையடுத்து சக்தி, மருது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கொட்டிவாக்கத்தில் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர்கள் சக்தி, மருது ஆகியோருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
கால் டாக்சி ஓட்டுநர் வாடிக்கையாளரை தவிர வேறு யாரையும் காரில் ஏற அனுமதிக்கக் கூடாது என்பது விதிமுறை, எனவே ஓட்டுநர் வெங்கடேசனை உடனடியாக பணி நீக்கம் செய்துவிட்டோம் என்று ஓலா விளக்கம் அளித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications