திருவேற்காடு பிரசாதத்தோடு ஜெ.வைப் பார்க்க வந்த சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா!
சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் பிரசாதத்தோடு உடல் நிலை சரியில்லாத தமிழக முதல்வரை பார்க்க அப்போலோ மருத்துவமனைக்கு வந்த நடிகைகள் சச்சுவையும், வெண்ணிற ஆடை நிர்மலாவையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து உடல் நலம் பற்றி விசாரிக்க பழம்பெரும் நடிகைகளான சச்சு மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களை வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து, "எங்களை உள்ளே விடாவிட்டாலும் பரவாயில்ல. அவங்களுக்காக நாங்க திருவேற்காடு கோவிலுக்கு சென்று வந்தோம். இந்த பிரசாதத்தை நீங்களே கொடுத்துடுறீங்களா" என்று சச்சுவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் கேட்டனர். அதனை வாங்க போலீசார் மறுத்துவிட்டனர். மேலும், இதையெல்லாம் மேலிடத்தில்தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளனர்.
பின்னர், மருத்துவமனையின் வாசலில் நின்றிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சச்சுவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் காரில் ஏறி புறப்பட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications