அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலி.. நெய்வேலியில் பரபரப்பு
நெய்வேலி அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்வேலி: நெய்வேலி அருகே அமைச்சர் எம்.சி.சம்பத்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நெய்வேலி வழியாக விருத்தாசலத்திற்கு சென்று கொண்டிருந்தார். நெய்வேலியில் என்.எல்.சி மருத்துவமனை அருகே அமைச்சரின் வாகனம் சென்று கொண்டிருந்தது.

அப்பபோது பின்னால் வந்த அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அந்த முதியவர் என்எல்சி பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடலூர் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
விசாரணையில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி உயிரிழந்த முதியவர் செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்த 58 வயதான தங்கராசு என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நெய்வேலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications