2வதாகவும் பெண் பிறந்ததால் சோகம்... பேத்தியை விஷம் வைத்துக் கொன்ற பாட்டி கைது
தர்மபுரி: தர்மபுரியில் பெண் குழந்தைக்கு விஷம் வைத்து கொன்ற பாட்டி கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்துள்ள கே.மோட்டூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சந்திரா. இவர்களளின் ஒரே மகள் ஹேமாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இத் தம்பதிகளுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த ஹேமாவுக்கு கடந்த ஆண்டு இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

பிறந்த சில நாட்களில் அந்த குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதுகுறித்து கிராம் நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இறந்த பெண் குழந்தையின் உடல் உறுப்புகளை ரசாயன ஆய்வுக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த குழந்தை விஷம் கொடுத்து கொல்லப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து காரிமங்கலம் போலீஸார் ஹேமா குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை விஷம் கொடுத்து கொன்றதாக பாட்டி சந்திரா ஒத்துக்கொண்டார். இதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு மற்றும் போலீஸார் சந்திராவை கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications