புதுக்கோட்டையில் கொடூரம் – 60 வயது முதியவர் தலை துண்டித்துக் கொலை!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 60 வயது தக்க முதியவர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மச்சுவாடி அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டு நடுரோட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பின்னர் இது பற்றி கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா தலைமையில் டவுன் டி.எஸ்.பி. பாலகுரு மற்றும் கணேஷ் நகர் புதுக்கோட்டை டவுன் பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு நடுரோட்டில் கிடந்த தலையை கைப்பற்றினார்கள். அதன் அருகில் உள்ள வாய்க்காலில் ரத்தக் கறையுடன் கிடந்த மூட்டையை மீட்டனர். அதனை பார்த்த போது கொலையுண்ட முதியவரின் உடல் இருந்தது. அதனையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிணம் கிடந்த இடத்தின் அருகே ரத்தத்தால் எழுதப்பட்ட வாசகம் இருந்தது. என் மாமாவை பற்றி அவதூறாக பேசினால் இது தான் கதி என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது. மேலும் அருகில் இருந்த மின் கம்பத்திலும் ரத்தத்தால் கைரே கைகள் பதிக்கப்பட்டிருந்தது.
வாசகத்தின் அடிப்பகுதியில் முத்துப்பாண்டி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஐ.என்.சரவணன் என்றும் ரத்தத்தால் எழுதி வைக்கப்பட்டிருந்தது.கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளியின் கை ரேகைகளை பதிவு செய்த போலீசார் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கி வருகின்றனர்.
கொலையானவர் யார் என்றும், கொலையாளி புதுக்கோட்டையை சேர்ந்தவரா என்றும், எதற்காக கொடூராக கொலை செய்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications