கணவன்-மனைவிக்குள் சண்டை... சமாதானம் செய்ய வந்த முதியவர் கல்லால் அடித்துக் கொலை
நாமக்கல்: நாமக்கல் அருகே கணவன் - மனைவி சண்டையை தீர்த்து வைக்க வந்த முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி அருகிலுள்ள முட்டாஞ்செட்டியை சேர்ந்த விவசாயி குமரேசன் (41). இவரது மனைவி கலைச்செல்வி (38). கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம்.
அந்தவகையில், நேற்றும் இருவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது குமரேசனின் தோட்டத்திற்கு அருகில் வசித்து வந்த கோவிந்தகோனார் (70) என்பவர், அவர்களின் சண்டையை விலக்கி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால் குமரேசனுக்கும், கோவிந்தகோனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன், அருகில் கிடந்த கல்லை எடுத்து கோவிந்தகோனாரை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தகோனார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்த அப்பகுதி மக்கள், குமரேசனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications