பழைய முறை vs புதிய முறை.. உங்களுக்கு மாதாமாதம் எவ்வளவு வருமான வரி பிடிப்பார்கள்.. விவரம்
சென்னை: உங்களுக்கு மாதம் மாதம் வருமான வரிக்காக டிடிஎஸ் பிடிக்கிறார்களா.. பழைய முறையில் எவ்வளவு பிடிப்பார்கள், புதிய முறையில் எவ்வளவு பிடிப்பார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
மாதம் 7.5 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு புதிய முறையில் வரி பிடிக்கிறார்கள். அதாவது 7.5லட்சம்வரை புதிய முறையில் வருமான வரி பிடிக்கப்படுவது இல்லை. ஆனால் பழைய முறையில் 5 லட்சத்துக்கு மேல் இருந்தாலே வருமான வரி பிடிப்பார்கள். அதேநேரம் கழிவுத்தொகை 50 ஆயிரம் மற்றும் 80C - ₹1,50,000, 80D - ₹75,000, 80CCD - ₹50,000 ஆகியவற்றை செய்திருந்தால் பழைய வருமான வரி முறைப்படி உங்களுக்கு வருமான வரி ஒரு ரூபாய் கூட பிடிக்க மாட்டார்கள்.

எனவே இப்போது உள்ள இந்த நடைமுறைகள் காரணமாக புதிய அல்லது பழைய இரண்டு முறையிலும் 7.5லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வருமான படிக்கப்பட வாய்ப்பு இல்லை. சரி உங்களுக்கு மாதம் எவ்வளவு வருமான வரி பிடிப்பார்கள் என்பதை பார்ப்போம்.
பழைய முறை கணக்கு: ஆனால் நீங்கள் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.. அப்படி வாங்கினால், அதில் 50 ஆயிரம் கழிவுத்தொகை எடுத்துவிடுங்கள். அதன்பின்னர் பழைய முறைப்படி அதன்பின்னர் 80C - ₹1,50,000, 80D - ₹75,000, 80CCD - ₹50,000 ஆகியவற்றின் மூலம் சுமார் 2 லட்சம் முதலீடு செய்திருந்தால் , 8 லட்சத்தில் 5.5லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டும். மொத்தம் 23400 ரூபாய் ஆண்டுக்கு வருமான வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். அதாவது மாதம் 1950 ரூபாய் உங்களுக்கு வருமான வரி பிடிப்பார்கள்.
புதிய முறை கணக்கு: இதே இது புதிய வருமான வரி கணக்குப்படி 50 ஆயிரம் கழிவுத்தொகை போக மீதமுள்ள 7.50 லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டும். அந்த வகையில் ஆண்டுக்கு 31200 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும். அதாவது 8 லட்சம் ஆண்டுக்கு சம்பளம் வாங்குவோருக்கு புதிய முறைப்படி ஒவ்வொரு மாதமும் 2600 ரூபாய் வரி பிடிப்பார்கள்.

பழைய முறை 8.5லட்சம் : அடுத்தாக நீங்கள் ஆண்டுக்கு 8.5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.. அப்படி வாங்கினால், அதில் 50 ஆயிரம் கழிவுத்தொகை எடுத்துவிடுங்கள். அதன்பின்னர் அதன்பின்னர் 80C - ₹1,50,000, 80D - ₹75,000, 80CCD - ₹50,000 ஆகியவற்றின் மூலம் சுமார் 2 லட்சம் முதலீடு செய்திருந்தால் , 8.5 லட்சத்தில் 6 லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டும். மொத்தம் 33800 ரூபாய் ஆண்டுக்கு வருமான வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். அதாவது மாதம் 2816 ரூபாய் உங்களுக்கு வருமான வரி பிடிப்பார்கள்.
புதிய முறை 8.5லட்சம்: இதே இது புதிய வருமான வரி கணக்குப்படி 50 ஆயிரம் கழிவுத்தொகை போக மீதமுள்ள 8 லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டும். அந்த வகையில் ஆண்டுக்கு 31200 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும். அதாவது 8 லட்சம் ஆண்டுக்கு சம்பளம் வாங்குவோருக்கு புதிய முறைப்படி ஒவ்வொரு மாதமும் 3033.33 ரூபாய் வரி பிடிப்பார்கள். இந்த தகவல்களை பொருளதார நிபுணரான ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டிருந்த பதிவில், "HRA என்பது நபருக்கு நபர் வேறுபடுவதால், நான் அதை அனுமானங்களில் சேர்க்கவில்லை. தயவு செய்து உங்களின் தொடர்புடைய HRA புள்ளிவிவரங்களைக் குறைத்து, வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் இருந்து அதைக் குறைத்து, பின்னர் உங்கள் வரி செலுத்துதலுக்கான அட்டவணையை பாருங்கள்" என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே 9 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு கண்டிப்பாக வருமான வரியில் புதிய முறை தான் பெஸ்ட் . 10லட்சம் அல்லது அதற்கு மேல் எவ்வளவு சம்பளம் வாங்குவோராக இருந்தாலும் அவர்களுக்கு புதிய முறையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் வரிவிலக்கு எதுவும் இல்லை.
அதேநேரம் பழைய முறையை ஒப்பிடும் போது வரி குறைவு எனவே 9 லட்சம் சம்பளம் வாங்கினாலே புதிய முறைக்கு தாவுவது பெஸ்ட் ஆகும். ஏனெனில் 2 லட்சம் ரூபாய் அளவிற்கு முதலீடு செய்வது கடினம். தற்போது புதிய வருமான முறை அமல்படுத்தப்பட்ட பிறகு அதில் எந்த வருமான வரி விலக்கும் கிடையாது. மக்களே முழுமையாக வருமான வரி மாதம் எவ்வளவு பிடிப்பார்கள் என்பதை அறிய செய்தியில் உள்ள பட்டியலை பாருங்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications