கிரேட் எஸ்கேப்.. ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்ட பாட்டி.. நீண்ட நேரம் போராடி மீட்ட மனிதம்
தண்டவாளத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் ஒரு பெண்
Recommended Video
சென்னை: ரயிலுக்கு அடியில் சிக்கிய பாட்டியை.. ரத்த காயத்துடன் உயிருடன் மீட்டுள்ளனர்.. இது சம்பந்தமான மீட்பு வீடியோ வைரலாகி வருகிறது.
இன்று காலை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை- பெங்களூரு டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ரயில் பேசின் பிரிட்ஜை கடந்து வந்தபோது, திடீரென ஒரு பாட்டி தண்டவாளத்தை கடக்க முயற்சித்தார்.
அவர் நைட்டி அணிந்திருந்தார்.. ரயில் வருவதற்குள் கடந்துவிடலாம் என்று வேகமாக சென்றவர்... தடுமாறி தண்டவாளத்திலேயே விழுந்துவிட்டார்... அவரை பார்த்ததும், ரயில் டிரைவர் பிரேக் போட பார்த்தார்... ஆனாலும் பிரேக் பிடித்தும் ரயில் டக்கென நிற்கவில்லை.. அதனால், லேசான வேகத்தில் வந்து பாட்டி மீது மோதிவிட்டது.

எஞ்சின்
இதனால் நிலைதடுமாறி பாட்டி அந்த தண்டவாளத்திலேயே விழுந்துவிட்டார்.. ரயிலின் எஞ்சினுக்கு அடியில் வசமாக அவர் சிக்கிக்கொண்டார்... அவரால் ஊர்ந்து வெளியே வர முடியவில்லை.. தலை பலமாக மாட்டிக் கொண்டுவிட்டது.. அதனால் அசைக்ககூட முடியவில்லை. பாட்டி எஞ்சினுக்கு கீழே சிக்கி கொண்டார் என்பதை அறிந்துகொண்ட டிரைவர் ரயிலை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி ஓடி வந்தார்.

ரயில்வே போலீஸ்
அப்போதுதான் ஆபத்தான முறையில் பாட்டி சிக்கியிருப்பதை உணர்ந்தார்.. அந்த சமயத்தில், பாதுகாப்பு பணி முடித்துவிட்டு ரயில்வே போலீஸ் ராஜாராம் என்பவர் வந்து கொண்டிருந்தார்.. இவர் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர். அவரும் பாட்டி ரயிலுக்கு அடியில் சிக்கியிருப்பதை கண்டு மீட்க ஓடிவந்தார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் மற்ற பயணிகள், பொதுமக்களும் அங்கு வந்துவிட்டனர்.

ரத்த காயங்கள்
ரயிலை பின்பக்கமாக இயக்கினால்தான் பாட்டியின் தலையை வெளியே எடுக்க முடியும் என்பது தெரிந்தது. அதனால் ரயில் டிரைவர் பின்பக்கமாகவே ரயிலை லாவகமாக இயக்கி.. மெதுவாக நிறுத்தினார்.. அதற்கு பிறகுதான் பாட்டியை பத்திரமாக மீட்க முடிந்தது. ஆனால் அவரது முகம் தண்டவாளத்தில் இருந்த கற்களில் உராய்ந்து.. தேய்ந்து.. ரத்த காயங்கள் ஏற்பட்டன.

வீடியோ
ஆனால் உயிர் பிழைத்த அவருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது.. அதற்கு பிறகு அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, அவரது வீட்டுக்கும் தகவலை சொன்னார்கள்.. இப்போது பாட்டி நன்றாக இருக்கிறாராம். பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள், பயணிகள் என எல்லோரும் சேர்ந்து பாட்டியை பத்திரமாக இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications