சிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி- 2 பேர் படுகாயம்
சிவகாசி அருகே வெம்பகோட்டையில் தனியார் பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிவகாசி: சிவகாசி அருகே வெம்பகோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் மணிமாறன் என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியில் ஜெயபிரகாஷ் என்பவரின் பட்டாசு ஆலை உள்ளது. இதில் நேற்று மதியம் 3 மணிக்கு பூச்சட்டிக்கு மருந்து அடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மருந்தில்ஏற்பட்ட உராய்வில் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அறைகள் வெடித்து சிதறின இதில் எட்டூர் மணிமாறன், 32, முத்தால் நாயக்கன்பட்டி வீரபாண்டி, 48, திருத்தங்கல் சுந்தரராஜ், 38 ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலையில் வெடிவிபத்தில் படுகாயமடைந்த மணிமாறன் என்ற தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுந்தரபாண்டி, சுந்தரராஜ் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில், வெள்ளிக்கிழமை ராஜாசிங் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் செந்தில், மூர்த்தி இருவரும் பலத்த தீக்காயமடைந்தனர். தகவலறிந்த எம்.புதுப்பட்டி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கடந்த மாதம் 20 நாட்களுக்கு மேல் பட்டாசு ஆலை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இப்போதுதான் செயலபடத்தொடங்கியுள்ள நிலையில் வரிசையாக விபத்துகள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications