தென்காசி அருகே அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - டிரைவர் பலி
தென்காசி அருகே அரசுப்பேருந்தும் காரும் மோதிய விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார். பேருந்து டிரைவர் படுகாயமடைந்தார்.
நெல்லை மாவட்டம் குத்துக்கல்வலசை அருகே கோயும்புத்தூரில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், கடையநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கார் டிரைவர் உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் பகுதிகளில் தற்போது சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கு தற்காலிக ஓட்டுனராக கடையநல்லூரை சேர்ந்த பூசை பாண்டியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை பணி முடித்து விட்டு சொகுசு காரில் குற்றாலத்தில் இருந்து தனது சொந்த ஊர் கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார்.
குத்துகல்வலசை அருகே வரும் போது கோயமுத்தூரில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பூசை பாண்டியன் வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் பூசை பாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

தகவலறிந்த இலத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த பூசை பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணி காயங்களுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications