பன்றிக் காய்ச்சல் தாக்கி பெண் உயிரிழப்பு! சென்னையில் பலி எண்ணிக்கை 2ஆனது!!
சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே சீனிவாசன் என்பவர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பதால் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னையை அடுத்த மறைமலைநகரில் வசித்து வந்த சரஸ்வதி என்பவர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
அப்போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து சரஸ்வதிக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சரஸ்வதி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சரஸ்வதி குடும்பத்தினர் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகளை சைதாப்பேட்டை சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினார்.
ஆந்திரா, தெலுங்கானாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலர் பலியாகி வரும் நிலையில் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications