விஜயகாந்த் மீது தொடரும் அதிருப்தி... தேமுதிகவில் தொடர்ந்து விழும் விக்கெட்டுகள்...
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது மாவட்ட செயலாளர்களுக்கு அதிருப்தி தொடர்கிறது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்குள்ளாகவே தேமுதிகவில் இருந்து 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் விலகி திமுக, அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளனர்.
தேமுதிக தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.என் ராஜன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தன்னை திமுகவுடன் இணைத்துக்கொண்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை வீழ்த்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்த விஜயகாந்த், பின்னர் கூட்டணி அமைத்து தொண்டர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார்.
மாவட்ட நிர்வாகிகளின் கருத்தை ஏற்காமல் விஜயகாந்த் செயல்பட்டதாகவும் வி.என். ராஜன் கூறினார். தேமுதிகவில் இருந்து விலக மேலும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும் வி.என்.ராஜன் தெரிவித்துள்ளார்.
வி. என். ராஜன் திமுகவிற்கு சென்ற சில மணி நேரத்திலேயே தென் சென்னை மாவட்டத்திற்கு பொறுப்பாளரை நியமித்தார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தேசிய முற்போக்கு திராவிட கழகம் தென் சென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்களாக வி.சி.ஆனந்தன், (திநகர் பகுதி கழக செயலாளர்) B.பிரபாகரன், ஆகியோர் இன்று (11.07.2016) முதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மாவட்ட, பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கழகம் சிறப்பான வளர்ச்சி பெற பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிக கூட்டணி
சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை இழுத்து பலமான கூட்டணி அமைக்க முயற்சி செய்தது திமுக. பல கட்ட பேச்சுவார்த்தைகளை ரகசியமாக நடத்தியது. ஆனால் தேமுதிகவோ மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.
இது திமுகவை மட்டுமல்ல தேமுதிக நிர்வாகிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே தேமுதிக நிர்வாகிகள் திமுகவுக்கு தாவினர்.

வடசென்னை யுவராஜ்
வடசென்னை மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் யுவராஜ் முதல் விக்கெட்டாக விழுந்தார். தொடர்ந்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் தினேஷ் இன்று திமுகவில் இணைந்தார்.

திருப்பூர் தெற்கு மாவட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கீர்த்தி ஜி.சுப்பிரமணியம் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்துக்கொண்டார். தொடர்ந்து நிர்வாகிகள் திமுகவிற்கு தாவினர்.

வி.சி. சந்திரகுமார் அணி
கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் தலைமையில் சி.எச்.சேகர் (திருவள்ளூர்), பார்த்திபன் (சேலம் மேற்கு), என்.கார்த்திகேயன் (திருவண்ணாமலை வடக்கு), விஸ்வநாதன் (வேலூர் மத்தி), செந்தில்குமார் (ஈரோடு வடக்கு) என மேலும் 5 மாவட்ட செயலாளர்கள் தேமுதிகவில் இருந்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி நீக்கப்பட்டதால், மக்கள் தேமுதிக தொடங்கினர். இவர்கள் விரைவில் திமுகவில் இணைய உள்ளனர்.

மா.செக்களின் தொடர் தாவல்
தேர்தல் முடிவு வெளியான பிறகும், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் திமுக, அதிமுகவுக்கு செல்வது தொடர்கிறது. தேமுதிக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஏ.வி.ஆறுமுகம் கடந்த மாதம் 14ம் தேதி திமுகவில் இணைந்தார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாண்டியன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் ஆகியோர் அதிமுகவில் கடந்த மாதம் 28ம் தேதி இணைந்தனர்.

அதிமுகவில் இணையும் காமராஜ்
தேமுதிக நாமக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சம்பத் கடந்த 1ம் தேதி திமுகவில் இணைந்தார். தேமுதிக வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்சென்னை மா.செ விலகல்
இதனிடையே இன்று தேமுதிக தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.என் ராஜன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தன்னை திமுகவுடன் இணைத்துக்கொண்டார்.

அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்
கடந்த சில மாதங்களில் மட்டும் தேமுதிக வில் இருந்து 13 மாவட்ட செயலாளர்கள் விலகியுள்ளனர். தேமுதிக தேர்தல் பொறுப்பாளராக பதவி வகித்த கே.ஆர்.வீரப்பன், டெல்லி மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி, தேமுதிக தலைமை நிலைய செயலாளராக இருந்த கே.எஸ்.மலர்மன்னன், தொழிற்சங்க செயலாளராக இருந்த சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications