பாஜகவின் புதிய ஸ்லீப்பர் செல்களாக 33 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. எடப்பாடிக்கு 'குடைச்சல்'
பாரதிய ஜனதாவின் புதிய ஸ்லீப்பர் செல்களாக 33 அதிமுக எம்.எல்.ஏக்கள் வளைக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் பதவி உள்ளிட்டவை இந்த கோஷ்டி வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் புதிய ஸ்லீப்பர் செல்களாக 33 அதிமுக எம்.எல்.ஏக்கள் வளைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் கோர திட்டமிட்டுள்ளது இந்த கோஷ்டி.
ஜெயலலிதா இல்லாத அதிமுகவை பாஜக பல துண்டுகளாக சிதைத்து வருகிறது. ஏற்கனவே ஓபிஎஸ், எடப்பாடி, தினகரன், திவாகரன் கோஷ்டிகளாக அதிமுக உடைந்து போயுள்ளது.

33 எம்.எல்.ஏக்கள்
இப்போது ஜாதி ரீதியாக 33 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டிருக்கிறது பாஜக. இதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.

அமைச்சரவை பிரதிநிதித்துவம்
அந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அமைச்சரவையில் போதிய பிரதிநித்துவம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியே பாஜக வளைத்து வைத்துள்ளதாம். பாஜகவின் உத்தரவைத் தொடர்ந்துதான் அண்மையில் இந்த எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

துணை முதல்வர்
தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும்; அதிகபட்சமாக துணை முதல்வர் பதவியும் வேண்டும் என முதல்வர் எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து நிம்மதியை கெடுப்பதுதான் பாஜகவின் ப்ளான். அதாவது எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு எம்.எல்.ஏ.க்கள் அணி திரளுவதற்கு எதிரான ஆயுதமாக இவர்களை பயன்படுத்தப் போகிறதாம் பாஜக.

அடுத்த அணி?
இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்னும் கூடுதல் குடைச்சலை கொடுக்கும் வகையில் அடுத்த அணியையும் ரெடி செய்ய காத்திருக்கிறதாம் பாஜக. எந்த திசையில் இருந்து எப்போது கலகக் குரல் வெடிக்குமோ என்கிற பீதி அதிமுகவில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications