மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பலமுறை உல்லாசம்.. டீ மாஸ்டரை கொன்று கொடைக்கானல் மலையில் வீசிய கணவர்!
மதுரை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை, கணவரே கொன்று கொடைக்கானல் மலையில் இருந்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மதுரை: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனை, கணவரே கொன்று கொடைக்கானல் மலையில் இருந்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த் புரம் சோலை அழகுபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். 38 வயதான மணிக்கண்டன் டீக்கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார்.
மணிகண்டனும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனும் நண்பர்கள் என தெரிகிறது. இந்நிலையில் சீனிவாசனின் மனைவிக்கும் மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

மனைவியுடன் உல்லாசம்
இதனால் சீனிவாசனின் மனைவியும் மணிக்கண்டனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விஷயம் அரசல்புரசலாக சீனிவாசனுக்கு தெரியவந்தது.

கொடைக்கானலுக்கு அழைத்து
இருவருக்குமான கள்ளத்தொடர்பை உறுதிசெய்த சீனிவாசன், மணிகண்டனை கொல்ல திட்டமிட்டார். அதன்படி, சீனிவாசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை கடந்த 24ஆம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர்.

மணிகண்டன் கொலை
வட்டக்கானல் பகுதியில் அவர்கள் தங்கி இருந்து விட்டு இரவு விடுதியில் மது அருந்தினர். பின்னர் மணிகண்டனை கொலை செய்து பாம்பார்புரத்தில் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தூக்கி வீசினர்.

போலீஸில் புகார்
அதன் பிறகு அவர்கள் அனைவரும் மதுரைக்கு திரும்பி விட்டனர். இதனிடையே மணிகண்டனின் குடும்பத்தினர் அவரை காணாமல் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸ் விசாரணை
போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் நண்பர்களே அழைத்துச் சென்று கொலை செய்து கொடைக்கானல் மலையில் இருந்து வீசியது தெரியவந்தது.

2 நாட்களாக தேடல்
இதனையடுத்து தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த 2 நாட்களாக கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடலை தேடி வந்தனர்.

பாறை இடுக்கில் உடல்
வட்டக்கானல் பகுதியில் 1,000 அடிக்கு கீழ் பாறைகளின் இடுக்கில் மணிகண்டன் உடல் கிடந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து மணிகண்டன் உடலை போலீசார் கைப்பற்றினர்.

விஷ்ணுபிரியா கள்ளக்காதலன்
இந்த கொலை தொடர்பாக சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதல் பிரச்சினையில் துணை நடிகை விஷ்ணுபிரியாவின் காதலன் பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்டு மலையில் வீசப்பட்டார்.

சுற்றுலாப் பயணிகள் பீதி
அவரது உடல் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொடைக்கானல் நகர மக்களையும் சுற்றுலா பயணிகளையும் பீதியடைய வைத்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications