அண்ணா பல்கலையில் மேலும் ஒரு முறைகேடு அம்பலம்.. கோடிக்கணக்கில் ஏப்பம்.. வசமாக சிக்கும் பேராசிரியை உமா
அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு முறைகேடு அம்பலமாகியுள்ளது.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழ்களை அச்சடிக்க விதிகளை மீறி ஒப்பந்தம் போட்டதாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இதில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் ஏற்கெனவே முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவனிடம் வசூல் வேட்டை
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா 18 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது போல் சான்றிதழ் தர ஒரே மாணவனிடம் ஏராளமான வசூல் வேட்டையை நடத்தியுள்ளது அம்பலமானது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த முறைகேடு
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றொரு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழ்களை அச்சடிக்க விதிகளை மீறி ஒப்பந்தம் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதிய நிறுவனத்துக்கு
சான்றிதழ்களை அச்சடித்து கொடுப்பதில் 2 மாதத்துக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு டெண்டரை உமா கொடுத்துள்ளார். அதற்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டியையும் மீறி டெண்டர் கொடுத்துள்ளார். இதில் ஏராளமான நிறுவனங்கள் டெண்டர் கோரி விண்ணப்பித்தன. இந்த டெண்டர் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடுக்கப்பட்டது.

அம்பலம்
போலியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவன அதிகாரிகளை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்துள்ளார். இதுவரை இந்த நிறுவனத்துக்கு யாரும் ஒப்பந்தம் கொடுத்ததில்லை என்று கூறப்படுகிறது. மதிப்பெண் பாதுகாப்புக்காக டெண்டரை நம்பகத்தகுந்த இடத்தில் மட்டுமே கொடுப்பது வழக்கம். ஆனால் உமாவோ முறைகேடாக விதிகளை மீறி போலி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது அம்பலமானது.

ரூ.62 கோடி மோசடி
தேர்வு கமிட்டி கூறிய அறிவுரைகளையும் ஏற்காமல் அவர்களுக்கு எந்த தகவலையும் கூறாமல் உமா தன்னிச்சையாக ரூ. 62 கோடி மதிப்பிலான டெண்டரை போலி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications