புத்தகங்கள் கேட்ட ஸ்டாலினுக்கு காளையை பரிசளித்த திமுக தொண்டர்கள்!!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர் ஒருவர் ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.
சென்னை: திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி தொண்டர் ஒருவர் அவருக்கு ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கியுள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றதன் நினைவாக அந்த காளை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி கட்சித் தொண்டர்கள் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மாறாக பொன்னாடைக்கு பதில் புத்தகங்களை வழங்குங்கள் என வேண்டுகோள் வித்திருந்தார்.

பொன்னாடைக்கு பதில் புத்தகம்
புத்தகங்கள் தனது அறிவை மேலும் விசாலப்படுத்திக் கொள்ள உதவும் என்றும் தெரிவித்திருந்தார். எனவே தொண்டர்கள் பொன்னாடை, சால்வைக்கு பதில் புத்தகங்களை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

தொண்டர்கள் வாழ்த்து
இதைத்தொடர்ந்து அவரது பிறந்த நாளான இன்று திமுக தொண்டர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஏராளமான தொண்டர்கள் அவருக்கு புத்தகங்களை பரிசலித்து வருகின்றனர்.

குவிந்துள்ள புத்தகங்கள்
இதனால் தலைமைக் கழகம் மற்றும் அவரது வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் குவிந்துள்ளன. ஏராளமான தொண்டர்கள் வித்தியாசமான பல புத்தகங்கள் பல்வேறு வடிவங்களில் வழங்கினர்.

கருணாநிதியிடமிருந்து புத்தகம் பெற்ற ஸ்டாலின்
தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். பின்னர் அவரிடமிருந்து நூறு பேர் என்ற புத்தகத்தை ஸ்டாலின் பரிசாக பெற்றார்.

குடும்பத்துடன் கேக் வெட்டிய ஸ்டாலின்
தனது வீட்டில் மகன், மருமகள் பேரக்குழந்தைகள், சகிதமாக மனைவியுடன் கேக்கை வெட்டி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

காளையை வழங்கிய தொண்டர்
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஹிர்ஷா என்பவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றிப் பெற்றதன் நினைவாக காளை ஒன்றை பரிசாக வழங்கினார். புத்தகங்கள் வழங்கிய தொண்டர்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு காளை வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications