பழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம் - என்னென்ன கட்டுப்பாடுகள்
பழனி மலை முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் 10 வயதிற்கு உட்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை 5500 பேரை தாண்டியுள்ளது. இன்று முதல் கோவில் திருவிழாக்கள், மத விழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூட ஊரடங்கு அமலாகியுள்ளது.

இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் இன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்கள், சமூக இடைவெளியை பின்பாற்றாதவர்கள், முக கவசம் அணியாதவர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை.
பக்தர்கள் மின்சார இழுவை ரயில், ரோப்கார் மூலமாக இரவு 7 மணி வரைக்கும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இரவு 7.45மணி வரை மேலிருந்து கீழேஇறங்க அனுமதிக்கப்படுவார்கள். கோவிலில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவும். கோவிலுக்குள் எச்சில் துப்பக்கூடாது. கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.
கோவிலில் பூ, பழம் அர்ச்சனை எதுவும் கிடையாது. சாமி சிலையை தொட்டு வணங்க அனுமதியில்லை. அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடாது எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனியில் மிக முக்கிய திருவிழாவான பங்குனி உத்திர திருவிழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications