நெல்லித்தோப்பு தொகுதியில் முதன்முறையாக ஆன்லைனில் வாக்குப்பதிவு
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் ஆன்லைன் தபால் வாக்குப்பதிவு முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் நெல்லித் தோப்பு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் முதன் முறையாக ஆன்லைன் மூலமாக தபால் வாக்குப்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக கட்சிகள் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.

இந்த நிலையில் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆன்லைன் மூலமாக தபால் வாக்குப்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அரசு அலுவலர்கள் தபால் மூலம் வாக்களிப்பதில் ஏற்படும் கால விரயத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நுட்ப சோதனைகளை மேற்கொண்ட பின்பு இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications