டோர்னியர் விமான விபத்தால் ஒத்தி வைக்கப் பட்ட ‘ஆப்ரேஷன் ஆம்லா’ மீண்டும் தொடங்கியது!
சென்னை: தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் ஆப்ரேஷன் ஆம்லா எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் கடற்படை, கடலோர காவல் படை, மாநில அரசின் கடலோர காவல் குழுமம் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த ஒத்திகையை நடத்துகின்றனர்.

கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். எனவே, கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ஆண்டிற்கு இரண்டு முறை இந்த ஒத்திகை நடத்தப் படுகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவி வரும் கடலோர காவல்படை வீரர்களை, காவல்துறையினர் விழிப்போடு செயல்பட்டு பிடிக்க வேண்டும் என்பதே, இந்த பாதுகாப்பு ஒத்திகையின் செயல்பாடு ஆகும்.
தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த ஒத்திகை நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி நடக்கவிருந்த பாதுகாப்பு ஒத்திகை, டோர்னியர் விமான விபத்தால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications