தமிழகம் முழுவதும் மறியல் போராட்டங்கள்- ரயில்கள் நிறுத்தம், பல்லாயிரக்கணக்கானோர் கைது
சென்னை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் மறியலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்று ரயில் பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதே போன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மறியலில் ஈடுபட்ட திமுக, காங்., விவசாயிகள் உள்ளிட்ட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் திருச்சி - லால்குடி ரயில் நிலையத்தில் மதுரை - சென்னை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக.,வினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூ மாவட்டம் செந்துறை அருகே மாத்தூரில் கடலூர்-திருச்சி பயணிகள் ரயிலை மறித்து திமுக.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியலால் புறநகர் ரயில் உட்பட 3 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் கோவையிலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications