புத்துணர்வு சிகிச்சை.. கோவை ஆரிய வைத்திய சாலையில் ஓபிஎஸ் அனுமதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக கோவை புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: புத்துணர்வு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆரிய வைத்தியசாலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க ஈபிஎஸ் அணியினர் ஏற்க தயாராக இல்லை.

ops admitted in kovai for Refreshing Treatment

அதே நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி பேச தயாராக இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி விட்டனர். இது மேலும் சிக்கலை ஏற்படுத்திது. இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது.

இந்த நிலையில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்கும் விதமாக ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இதனிடையே கடந்த வாரம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி புறப்பட்டு சென்று, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மாற்றி மாற்றி இரு அணியினரும் பிரதமரை சந்திப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, பொன்னையன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கோவை புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்குள்ள ஆரிய வைத்திய சாலையில் புத்துணர்வு சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+