பொதுக்குழுவை வெற்றிகரமாக கூட்டுவோம்.. ஓ.பன்னீர் செல்வம் உறுதி
பொதுக்குழுவை கூட்டியே தீருவோம் என்று துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
திருநெல்வேலி: அதிமுக பொதுக்குழுவை வெற்றிகரமாக கூட்டுவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தில், சுதந்திரப் போராட்ட வீரர், மாமன்னர் பூலித்தேவன் நினைவு மண்டபம் உள்ளது. இன்று அவரது பிறந்த தினம்.

இதை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், முதன்முறையாக மாவீரன் பூலித்தேவன் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடுவதாக கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி வரும் செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் என அறிவித்திருப்பது சட்ட விரோதமானது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சட்டவிரோதமாக நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுக்குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறினார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications