மதுரையில் தினகரனை சந்திக்கவில்லை: சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் விளக்கம்
மதுரையில் தினகரனை சந்திக்கவில்லை என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தினகரனை தாம் சந்திக்கவில்லை என்று ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏ மாணிக்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக 3 அணிகளாக பிளவுபட்டு மல்லுக்கட்டி வருகின்றன. டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்து கொள்ள முடியாது என்றும், அவரை துணை பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தது செல்லாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனிடையே எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலூரில் பொதுக் கூட்டத்துக்கு தினகரன் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பை கடுமையாக விமர்சித்தார் தினகரன்.

மீனாட்சி அம்மன் கோவில்
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது ஓபிஎஸ் அணியில் உள்ள சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கமும் அக்கோயிலுக்கு சென்றார்.

மாணிக்கம் எம்.எல்.ஏ.
இதையடுத்து தினகரனை மாணிக்கம் சந்தித்ததாக தகவல் பரவ அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தினகரனை தாம் சந்திக்கவில்லை என மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.

செல்வாக்கால் கூடவில்லை
இதுகுறித்து எம்.எல்.ஏ மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலூரில் தினகரனுக்கு கூடும் கூட்டத்தை வைத்து எதையும் எடை போட முடியாது. அது செல்வாக்கால் கூடிய கூட்டம் அல்ல. செல்வத்தால் கூடிய கூட்டம்.

ஆட்சிக்கு ஆபத்து இல்லை
நான் ஓபிஎஸ் அணியில்தான் உள்ளேன். எங்களால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எந்த பிரச்சினையும் வராது.

தினகரனை சந்திக்கவில்லை
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலில் நான் தினகரனை சந்தித்து பேசவில்லை. நான் தினகரனை சந்தித்ததாக கூறுவது தவறான தகவல்.
இவ்வாறு மாணிக்கம் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications