Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோஷ்டி சேர்க்க ரூ100 கோடி முதலீடு... இனி வந்தவரை லாபம் பார்ப்போம்.. ஓபிஎஸ் அசால்ட் கணக்கு!

அதிமுகவில் இருந்து விலகியபோது தன்னை தேடி வந்த நிர்வாகிகள், எம்எல்ஏ-க்களுக்கு பணம், உண்ணாவிரதப் போராட்டம் என ரூ.100 கோடி செலவு செய்தாகிவிட்டது. இதற்கு மேல் கிடைக்கும் வரை லாபம்தான் என்று ஓபிஎஸ் அசால்ட

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து விலகியபோது தன்னை தேடி வந்த நிர்வாகிகள், எம்எல்ஏ-க்களுக்கு பணம், உண்ணாவிரதப் போராட்டம் என ரூ.100 கோடி செலவு செய்தாகிவிட்டது. இதற்கு மேல் கிடைக்கும் வரை லாபம்தான் என்று ஓபிஎஸ் அசால்ட்டாக கணக்குபோட்டு வைத்துள்ளாராம்.

ஜெயலலிதா மறைந்த பிறகு, முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர் செல்வத்தை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார் புதிய பொதுச் செயலாளர் சசிகலா. இந்நிலையில் சசிகலாவுடன் முரண்பாடு குறித்து மக்களுக்கு வெளிபடுத்த ஓபிஎஸ் கையாண்டதுதான் ஜெ.சமாதியில் அவர் மேற்கொண்ட தியானம்.

இந்நிலையில் தனித்து செயல்படுவாக அறிவித்த ஓபிஎஸ்ஸின் பின்னால் சில எம்எல்ஏ-க்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அணிவகுத்தனர். இவர்கள் அனைவரும் சசிகலா எதிர்ப்பு அலை கூட்டமாகும். தன்னிடம் தஞ்சம் அடைந்த நத்தம் விஸ்வநாதன், மதுசூதனன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலா ரூ. 2 கோடி வரை ஓபிஎஸ் வாரி இறைத்தார்.

 எம்.எல்.ஏக்களுக்கு ரூ5 கோடி?

எம்.எல்.ஏக்களுக்கு ரூ5 கோடி?

அதேவேளையில் தனக்கு ஆதரவாக வந்த எம்எல்ஏ-க்களுக்கு ரூ.5 கோடி வரையும் செலவு செய்தாகிவிட்டதாகவும் தெரிகிறது. இதனால் மேலும் சில எம்எல்ஏ-க்கள் தம் பின்னால் வந்து தனக்கு ஆதரவு அளிப்பர் என்று ஓபிஎஸ் ஒரு கணக்கு போட்டியிருந்தார்.

 தவிடுபொடியாக்கிய தினகரன்

தவிடுபொடியாக்கிய தினகரன்

ஆனால் கூவத்தூரில் அடைக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி தினகரன் தக்க வைத்துக் கொண்டதன் மூலம் ஓபிஎஸ்ஸின் கணக்கை தப்புக் கணக்காக்கிவிட்டார். இதனால் ஓபிஎஸ் அணிக்கு தாவ இருந்த எம்எல்ஏ-க்களை அமைதி காத்தனர். மக்களிடம் செல்வாக்கை தெரிந்து கொள்ளவும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி வெறவும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரிய ஓபிஎஸ் அணியினர் ஜனாதிபதியிடம் சென்று கோரிக்கை விடுத்தனர்.

 மொத்தம் ரூ100 கோடி செலவு

மொத்தம் ரூ100 கோடி செலவு

மேலும் அரசியல் ஸ்டன்ட்டாக கடந்த மார்ச் 8-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். அதற்கான செலவு, போக்குவரத்து செலவு என அனைதையும் ஓபிஎஸ் தான் பார்த்துக் கொண்டார். அட்டை போல் முன்னாள் நிர்வாகிகள் ஒட்டி கொண்டிருந்தாலும் ஒரு பைசாகூட செலவு செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தார் பன்னீர் செல்வம். தற்போது வரையில் ஓபிஎஸ் ரூ.100 கோடி செலவு செய்துவிட்டார்.

 இதுதான் ஓபிஎஸ் கோஷ்டி வாதம்

இதுதான் ஓபிஎஸ் கோஷ்டி வாதம்

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைக்காக வாதிடும்போது கூட மருந்துக்கு கூட யாரும் இரட்டை இலையை தங்கள் அணியினருக்கு ஒதுக்குங்கள் என்று ஓபிஎஸ் தரப்பினர் கேட்கவில்லை. தினகரனுக்கு சின்னம் கிடைக்கக் கூடாது என்பதிலேயே குறியாக இருந்தனர்.

 வரும் வரை லாபம்

வரும் வரை லாபம்

'இரண்டு தரப்பினரும் ஒன்று சேர்ந்தால், சின்னம் ஒதுக்குவோம்' என தேர்தல் ஆணையம் கூறியதால்தான், எடப்பாடி இறங்கி வந்தார். ' முதல்வர் பதவியை விட்டுக் கொடுங்கள்' என டெல்லி தரப்பும் பன்னீருக்காக நெருக்குதல் கொடுக்கவில்லை. ' எடப்பாடியே தொடரட்டும்' என கிரீன் சிக்னல் காட்டியதால்தான், அமைதியாக வரும் வரை லாபம் என மூடில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ்.

 கடுப்பில் முனுசாமி அண்ட் கோ

கடுப்பில் முனுசாமி அண்ட் கோ

அதனால்தான் பத்திரிகையாளர் சந்திப்பிலும் மௌனத்தையே பதிலாகக் கொடுக்கிறார். சசிகலா எதிர்ப்பு மனநிலையில் உள்ள கே.பி.முனுசாமி போன்றவர்கள்தான், ' ஆட்சி போனால் என்ன? கட்சி போனால் என்ன?' என்ற எண்ணத்தில் பேசி வருகின்றனர். நிர்வாகிகள் பலம் இல்லாமல் சுணங்கிக் கிடக்கிறார் பன்னீர்செல்வம். இதையே தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+