குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு ராமச்சந்திரன் என பெயர் சூட்டிய ஓ.பி.எஸ்.
ஆர்.கே.நகர் பிரசாரத்தின் போது ஒரு தம்பதியின் ஆண் குழந்தைக்கு ராமச்சந்திரன் என பெயர் சூட்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை: .கே.நகர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆண் குழந்தைக்கு நெற்றியில் முத்தமிட்டு ராமச்சந்திரன் என பெயர் சூட்டியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், பாஜக சார்பில் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, சிபிஎம் லோகநாதன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரன் தொடர்ந்து வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தொண்டர்களுடன் தொப்பி அணிந்த படி நடந்து சென்றும், வாகனத்தில் சென்றும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக வேட்பாளரான மருது கணேஷ்., நேதாஜி நகர், கலைஞர் நகர், இந்திரா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியனுக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார். அவரை அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அதேபோல் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் அலை, அலையாய் வந்து ஆதரவு தெரிவித்தனர். வேட்பாளர் மதுசூதனனுடன், பன்னீர் செல்வம் திறநத் ஜீப்பில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டார். மேள தாளங்கள் முழங்க திரளான தொண்டர்கள் அதில் பங்கேற்று வீதி, வீதியாக வாக்கு சேகரித்தனர். அப்போது ஒரு தம்பதியின் குழந்தைக்கு நெற்றியில் முத்தமிட்டு ராமச்சந்திரன் என ஓ.பன்னீர்செல்வம் பெயர் சூட்டினார்.
ஜெயலலிதாவை பச்சிளம் குழந்தைகளையோடு சந்திக்கும் பெற்றோர் மனம் குளிர அவரும் பெயர் சூட்டி மகிழ்வது வழக்கம். புலிக் குட்டிகளுக்கு கூட பெயர் சூட்டி மகிழ்வது ஜெயலலிதாவின் வழக்கம். இப்போது அவரது செயல்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் பின்தொடர ஆரம்பித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications