சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: ஓ.பி.எஸ், ரஜினி, கமல் பங்கேற்பு
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார்.
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்பட பல நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாநில அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல் ஹாசன் பேசுகையில், '' நடிகர் திலகம் சிவாஜி, மாநில, தேசிய மற்றும் ஆசிய எல்லைகளை கடந்தவர். இந்த விழாவுக்கு யார் தடுத்திருந்தாலும் நான் வந்திருப்பேன்'' என்று பேசினார்.
''மாநிலத்தில் எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். எப்போதும் மக்களின் நினைவுகளில் வாழ்பவர் சிவாஜி கணேசன்'' என்றும் கமல் ஹாசன் புகழாரம் சூட்டினார்.
'அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமலுக்கு தெரியும்'
சிவாஜி சிலையமைத்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மேலும் உரையாற்றுகையில், '' சிவாஜி தேர்தலில் நின்று தோல்வியுற்றது அவருக்கு நேர்ந்த அவமானம் அல்ல. மக்களுக்குத்தான் அது அவமானம்'' என்று தெரிவித்தார்.
அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், தனக்கு தெரியாது என்று கூறிய ரஜினிகாந்த், அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமல் ஹாசனுக்கு தெரிந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்த விழாவில் பேசிய நடிகர் பிரபு, சிவாஜிகணேசனின் சிலையை கடற்கரையில் நிறுவியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆகையால், அவரது பெயரை இந்த மணி மண்டபத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ''தனது திரையுலக வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளவர் சிவாஜி கணேசன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவபெருமான் போன்றோரை நாம் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று திரையில் வாழ்ந்து காட்டியவர் சிவாஜி'' என்று சிவாஜிக்கு புகழாரம் சூட்டினார்.
தொடர்பான செய்திகள்:
- சிவாஜி கணேசன் சிலையை ஓ. பன்னீர்செல்வம் திறந்துவைப்பார் என அறிவிப்பு
- சிவாஜி மணி மண்டபம்: முதல்வர் பங்கேற்காத காரணம் என்ன?
- சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழா: குடும்பத்தினர் அதிருப்தி
பிற செய்திகள் :
- ''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை
- ஒன்றாய் பிறந்து, ஒன்றாய் பறந்து, ஒன்றாய் ஓய்வு பெற்ற இரட்டையர் விமானிகள்
- இலங்கை : கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை
- பாலியல் சீண்டல்களால் பழுதடைந்த பெண் ரோபோ
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications