டாஸ்மாக்காவது, ஒன்னாவது... இங்கே ஓ.பி.எஸ்ஸிடம் பாஸ்மார்க் வாங்கிய பி.தங்கமணியைப் பாருங்க!
கரூர்: கரூர் மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி கட்சிப் பதவி மற்றும் அமைச்சர் பதவியை விட்டுத் தூக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இன்று கரூரில் அதிமுக கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கட்சியினர் பெரும் உற்சாகத்துடன் கூட்டத்திற்கு வந்திருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வகித்த வந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி சமீபத்தில் இரு பதவிகளையும் விட்டுத் துரத்தியடிக்கப்பட்டார்.
இவர் தூக்கப்பட்டது அதிமுக வட்டாரத்தையே ஆச்சரியத்தி்ல் ஆழ்த்தியது. இவர் நீக்கப்பட இதுதான் காரணம் என்று கூறி பல காரணங்கள் உலா வந்தன. இந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

ஐவர் அணி வருகை
இந்தக் கூட்டத்தில் ஐவர் அணி என்று அதிமுகவினரால் செல்லமாக அழைக்கப்படும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செம கூட்டம்
இன்றைய கூட்டத்தில் அதிமுகவினர் பெரும் வெள்ளமென திரண்டு வந்திருந்தனர். அனைவரும் உற்சாகமாகவும் காணப்பட்டனர். காரணம் குறித்து சொல்லத் தேவையில்லை. நமக்கே புரியும்.

செந்தில் பாலாஜி எதிர்ப்பாளர்கள்
இன்றைய கூட்டத்தில் செந்தில் பாலாஜியால் ஓரம் கட்டப்பட்ட அதிமுக நிர்வாகிகள், பிரமுகர்கள் என பலரும் திரண்டு வந்திருந்தனர். இதனால் கூட்டம் நடந்த இடமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

இவ்வளவு கூட்டமா.. வியந்து போன ஓ.பி.எஸ்
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், எத்தனையோ செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் கலந்து கொண்டுள்ளோம். ஆனால் கரூர் மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட செயலாளரும் தொழிற்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான பி.தங்கமணி அறிவிக்கப்பட்ட பின்னர் 3 நாளில் இவ்வளவு கூட்டம் என்பது வியக்கத்தக்கதாக உள்ளது. இதைக் கேட்டால், பார்த்தால் அம்மா மகிழ்ச்சி அடைவார்கள் என்றார்.

அட... செ.பா.
என்ன விசேஷம் என்றால் இந்தக் கூட்டத்தில் செந்தில் பாலாஜியும் கலந்து கொண்டிருந்தார். ஓ. பன்னீர் செல்வம் பேச்சைக் கேட்டு சிவந்த அவரது முகம் கறுத்துப் போனது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications