அதிமுகவில் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் ஓபிஎஸ் என 67.30% பேர் கருத்து - புதிய தலைமுறை சர்வே
புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுகவில் முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் தகுதியானவர் என தெரியவந்துள்ளது.
சென்னை: அதிமுகவில் முதல்வர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் தகுதியானவர் என புதிய தலைமுறை டிவி நடத்திய கருத்துக்கணிப்பு தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது. ஆட்சியை சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் மக்களின் நாடிக்கணிப்பு என்ற பெயரில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யார் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர்? என புதிய தலைமுறை டிவி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யார் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர்? என கேட்கப்பட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி என 4.36% பேரும், ஓபிஎஸ் என 67.30% பேரும், பிறர் என 9.26% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 19.07% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் தமிழகத்தின் தற்போதைய அரசு 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்யும் எனக் கருதுகிறீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என 19.98% பேரும், இல்லை என 53.13% பேரும், கருத்துக் கூற விரும்பவில்லை என 26.88% பேரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications