மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே செயல்படுகிறோம்... அடித்துச் சொல்லும் பொன்னையன்!
ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : இருஅணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது. இரு அணிகளும் மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே இருக்கிறோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆகிறது ஆனால் அணிகளின் மனங்கள் இணையவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மைத்ரேயன் எம்பி முகநூலில் பதிவிட்ட கருத்து அதிமுகவில் மீண்டும் புகைச்சலைக் கிளப்பியது. மைத்ரேயனின் கருத்து அவரின் சொந்தக் கருத்து என்று மக்களவை துணை சபாநாயகரும், எம்பியுமான தம்பிதுரை தெரிவித்தார்.

இதற்கு தான் கூறியது தனிப்பட்ட கருத்து அல்ல, தொண்டர்களின் மன நிலை அது தான் என்று இன்று மீண்டும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தால் மைத்ரேயன். மைத்ரேயனின் அடுத்தடுத்தப் பதிவுகள் இரண்டு அணிகளுக்கு இடையில் நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் இந்த கருத்துக்கு முதல்வர் பழனிசாமியோ, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ இன்னும் வாய் திறக்கவேயில்லை.
இதனிடையே மைத்ரேயனின் லேட்டஸ்ட் அப்டேட்டில் தங்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் என்று ஒதுக்க வேண்டாம். முதல்வர்அணியினர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை ஒதுக்குவதாகக் கூறியுள்ளார். ஆனால் மைத்ரேயன் எம்பியின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமைச்சர்கள் மறுத்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பொன்னையன், இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது. இரு அணிகளும் மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications