அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாதா? அப்படினு தேர்தல் ஆணையம் எங்காவது சொல்லியிருக்கா.. வைத்தி கேள்வி
திருச்சி: நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க.; வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி அளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று திருச்சியில் மாநாடு நடைபெற உள்ள திடலில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட வந்தனர்.
இதில் ஆர்.வைத்திலிங்கத்திடம், அ.தி.மு.க. நிர்வாகிகள் போலீஸில் கொடுத்துள்ள புகார் மனு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் சொந்தமாகவில்லை.

சின்னம் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அ.தி.மு.க. கொடியில் விருப்பப்பட்டவர்கள் இரட்டை இலை சின்னத்தை வைப்பார்கள். அந்த அடிப்படையில் நாங்களும் வைத்திருக்கிறோம். சட்ட சிக்கலுக்கு பயந்து வைக்கவில்லை. இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு இன்னமும் நிரந்தரமாக உறுதியாகவில்லை.
கட்சி கொடி, சின்னம், கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். பயன்படுத்துவோம். வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்று நீதிமன்றம் கூறவில்லை. திருச்சியை போல் பல மாநாடுகளை தமிழ்நாட்டில் நடத்துவோம்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வே உண்மையான அ.தி.மு.க. ஆகும். எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டாவது இடம் தான். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications