மீண்டும் மோதல்? அதிமுக மாவட்ட செயலர் கூட்டத்தை புறக்கணித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
ஓபிஎஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைந்த பிறகும் இருஅணி நிர்வாகிகளிடையே மனக்கசப்பு இருந்து வருகிறது. இதுகுறித்து அதிமுக எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் பலமுறை வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் டிடிவி தினகரன் அணிக்கு கட்சியினர் தாவாமல் தடுக்கும் வகையிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
ஓபிஎஸின் ஆதரவாளர்களான மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாததால் ஓபிஎஸின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications