Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் முதல்வர் எடப்பாடி விழாவில் ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு இல்லை.... மைத்ரேயன் குற்றச்சாட்டு

மதுரையில் நடைபெற்ற முதல்வர் எடப்பாடி கலந்து கொண்ட முப்பெரும் விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு இல்லை என்று மைத்ரேயன் எம்.பி. குற்றம்சாட்டினார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மதுரையில் முதல்வர் எடப்பாடி விழாவில் ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு இல்லை- வீடியோ

    சென்னை : அதிமுகவின் முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் அணியினருக்கு அழைப்பு விடுக்காததால் தாம் முகநூலில் தெரிவித்த அதே நிலை நீடிப்பதாக மைத்ரேயன் எம்.பி. குற்றம்சாட்டினார்.

    ஜெயலலிதா மறைந்த பிறகு ஓபிஎஸ் தலைமையிலும், எடப்பாடி தலைமையிலும் இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரியதால் அந்த சின்னமானது முடக்கப்பட்டது.

    அத்துடன் சின்னம், கொடி, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

     அமாவாசை நாளில் இணைப்பு

    அமாவாசை நாளில் இணைப்பு

    அதிமுகவின் இரு அணிகளும் கட்சியின் நலன் கருதி கடந்த ஆகஸ்ட் மாதம் அமாவாசை நன்னாளில் இணைந்தனர். இதையடுத்து இரு அணிகளும் சேர்ந்தே இரட்டை இலைக்காக தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தன.

     எம்.பி. மைத்ரேயன் பேஸ்புக்

    எம்.பி. மைத்ரேயன் பேஸ்புக்

    இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆன போதிலும் மனங்கள் இணைய வில்லை என்ற கருத்தை மைத்ரேயன் முன்வைத்திருந்தார். மேலும் இது மைத்ரேயனின் சொந்த கருத்து என்று தம்பிதுரை கூறியதை மறுத்தார். இது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் பிரதிபலிப்பு என்றும் முதல்வர் அணியினர் தங்களை ஓபிஎஸ் அணியினராகவே பார்க்கின்றனர் என்றும் மைத்ரேயன் தெரிவித்திருந்தார்.

     ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம்

    ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம்

    இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி - ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதை கொண்டாட மதுரையில் தோப்பூரில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, இரட்டை இலை சின்னத்தை மீட்டதற்கான விழா, அதிமுக கொடியேற்று விழா என இன்று நடைபெற்றது.

     அழைப்பு இல்லை

    அழைப்பு இல்லை

    இந்த முப்பெரும் விழாவில் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி மற்றும் அவை தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு இல்லாததால் அந்த அணியினர் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஓபிஎஸ்ஸுக்கு ஏதும் தெரியாது என்று தகவல் கூறப்படுகிறது.

     பேஸ்புக் கருத்து

    பேஸ்புக் கருத்து

    இதுகுறித்து மைத்ரேயன் கருத்து தெரிவிக்கையில், மதுரையில் முதல்வர் எடப்பாடி விழாவில் ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என எனக்கு தெரியாது. ஒரு மாவட்ட செயலாளர், அமைச்சராக இருப்பவர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்ன அதற்கேற்றாற்போல் யார் யாருகெல்லாம் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டிருக்க வேண்டும். இப்படி முக்கியமானவர்கள் யாரையும் அழைக்காமல் மாவட்டச் செயலாளரோ அமைச்சரோ சுய விளம்பரத்துக்காக செய்தது கண்டிக்கத்தக்கது.

     அழைத்திருக்க வேண்டும்

    அழைத்திருக்க வேண்டும்

    சின்னம் கிடைத்ததே 2 நாள்களுக்கு முன்புதான். ஆனால் இவர்கள் வைத்துள்ள பிரம்மாண்ட கல்வெட்டை பார்த்தால் எதேச்சையாக நடந்தது போல் தெரியவில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்டே நடந்திருக்கிறது. இரட்டை இலை சின்னத்திற்காக டெல்லிக்கு நடையாய் நடந்து பாடுப்பட்டவர்கள் அனைவரையும் அழைத்திருக்கலாம். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

     பேஸ்புக்கில் கூறியது

    பேஸ்புக்கில் கூறியது

    நான் பேஸ்புக்கில் பதிவு செய்த கசப்பான உண்மை உண்மைதான். நான் தெரிவித்த நிலை அப்படியே இரு அணிகளுக்கிடையே நீடிக்கிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழிகாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும். ஓபிஎஸ் அணியினர் இரண்டாம் தர குடிமக்கள் போல் நடத்தப்படுகிறார்கள். எனவே ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் அவர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+