அந்த "30 டிக்கெட்டை"யும் விரட்டுங்க.. அப்புறம்தான்.. ஓபிஎஸ் அணியின் அதிரடி அட்டாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 30 டிக்கெட் அதிமுகவில் உள்ளனர் என்று ஓ.பி.எஸ் அணியின் கே.பி. முனுசாமி காட்டமாக கூறியுள்ளார்.

இரு அணி அதிமுகவின் இணைப்பு இன்று டமால் டுமீல் என உடைந்து சிதறிப் போனது. ஓ.பி.எஸ் அணியின் கே.பி.முனுசாமி இன்று தினகரன் அணியை வெளுத்துக் கட்டி விட்டார்.

குறிப்பாக சசிகலா குடும்பத்தைப் பற்றி அவர் காரசாரமாக விளாசித் தள்ளினார். அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்றும் அவர் விளாசித் தள்ள விட்டார்.

மொத்தக் குடும்பத்தையும்

மொத்தக் குடும்பத்தையும்

கே.பி. முனுசாமி பேசுகையில், ஜெயக்குமார் பேசும்போது தினகரன் குடும்பம் என்றுதான் கூறினார். சசிகலா பெயரையே அவர் சொல்லவில்லை. திரும்பத் திரும்ப தினகரன் குடும்பம் என்றுதான் கூறினார். மொத்த சசிகலா குடும்பத்தையும் அவர்கள் நீக்க வேண்டும்.

"அம்மா" செய்வது போல

அம்மா இருந்தால் எப்படி கட்சியை விட்டு நீக்குவாரோ, என்ன வார்த்தை சொல்லி அறிக்கை வெளியிடுவாரோ அதேபோல அறிக்கை வெளியிட்டு இவர்களை வெளியேற்ற வேண்டும்.

30 டிக்கெட் இருக்கு

30 டிக்கெட் இருக்கு

சசிகலா குடும்பத்தில் அவர் மட்டும் இல்லை. அங்கு ஒரு 30 டிக்கெட் இருக்கிறார்கள். அத்தனை பேரையும் கட்சியை விட்டு மொத்தமாக வெளியேற்ற வேண்டும். யாரும் இருக்கக் கூடாது. அதைத்தான் கோரி வருகிறோம்.

அதிகாரப்பூர்வமாக அறிவிச்சுட்டு வாங்க

அதிகாரப்பூர்வமாக அறிவிச்சுட்டு வாங்க

இத்தனை பேரையும் அதிகாரப்பூர்வமாக நீக்கி விட்டு அதை பகிரங்கமாக சொல்லட்டும். நாங்கள் பேச்சுவார்த்தைக்த தயாராக இருக்கிறோம். ஆனால் தற்போது தினகரனை மட்டும் வெளியே ஒதுங்கியிருக்கச் சொல்லி விட்டு நாடகமாடுகிறார்கள் என்றார் கே.பி. முனுசாமி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Team OPS is upset over the drama enacted by the Sasikala group and blasted them in public today at a press meet in Chennai.
Please Wait while comments are loading...