ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்: ஓபிஎஸ் நம்பிக்கை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15-ந் தேதி எண்ணப்படுகின்றன. இத்தொகுதியில் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா போட்டியிட உள்ளார்.

அதேபோல் ஓபிஎஸ் அதிமுகவும் சசிகலா அதிமுகவும் இத்தொகுதியில் போட்டியிட உள்ளன. அதிமுக வாக்குகள் சிதறி கிடக்கும் நிலையில் இத்தொகுதியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு மக்கள் ஆளும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர் என்றார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications