For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டை இலையை பெற்ற ஒற்றுமையுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்... மவுனம் கலைந்த ஓபிஎஸ்

ஒற்றுமையாக இரட்டை இலையை பெற்றது போல் அதே ஒற்றுமையுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது தொடர் டுவீட்டுகளில் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஒற்றுமையாக இருந்தே பெற்றோம். அதே ஒற்றுமையுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுசூதனன் தலைமையிலான ஓபிஎஸ், செம்மலை, ஈபிஎஸ் அடங்கிய குழுவுக்கு இரட்டை இலை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக மதுரையில் முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பினரை அழைக்கவில்லை என்று அந்த அணியை சேர்ந்தோர் நேற்று வேதனை தெரிவித்தனர்.

மேலும் கல்வெட்டில் முதல்வர் பெயர் மட்டுமே உள்ளது என்றும் குற்றம்சாட்டினர். இதையடுத்து அவசர அவசரமாக ஓபிஎஸ்ஸின் பெயரும் கல்வெட்டில் சேர்க்கப்பட்டது.

 தொடர் டுவீட்

தொடர் டுவீட்

இந்த களேபரங்களுக்கு மத்தியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டரில் தொடர் டுவீட்டுகளை பதிவு செய்துள்ளார். அதில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பின், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கபளீகரம் செய்துவிடலாம் என நினைத்தவர்களின் கனவைத் தகர்த்து, இந்த இயக்கம், மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களுக்கே உரியது என்பதை நிருபிக்கும் வகையில்,

கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்யப் போகிறார்கள்?

கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்யப் போகிறார்கள்?

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன. இதற்கிடையில் மக்கள் நலக்கூட்டணியும் பிளவுபட்ட நிலையில் திமுகவுடன் இந்த கட்சிகள் கைகோர்க்கும் என்று சொல்லப்பட்டது. கடந்த முறை ஆர்.கேநகர் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தனிதது களத்தில் போட்டியிட்டது,இந்நிலையில் இந்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மதிமுக கூட்டணி வைக்குமா?

மதிமுக கூட்டணி வைக்குமா?

இதே போன்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் முரசொலி பவளவிழா நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இதன் மூலம் அவர் திமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று அப்போது முதலே அரசியல் வட்டாரத்தில் பரபரப்புகள் கிளம்பின. இந்நிலையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதிமுக திமுகவிற்கு ஆதரவு தருமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வைகோவின் தேர்தல் நிலைப்பாடு?

வைகோவின் தேர்தல் நிலைப்பாடு?

இதனிடையே டிசம்பர் 3ம் தேதி கட்சியின் உயர்மட்டக் குழு கூடி தேர்தலில் போட்டியா அல்லது ஆதரவா என்பதை முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதயசூரியனோடு பம்பரம் இணையுமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்பதை பொருத்தே வைகோவின் அடுத்தகட்ட தேர்தல் நிலைப்பாடுகளும் இருக்கும் என்று கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

English summary
Deputy CM O.Panneer Selvam says that they will face the R.K.Nagar bypoll with unity. He also expressed his happiness to get twin leaves symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X