"அம்மா... அம்மா".. பதவியேற்பில் சட்டசபையில் உடைந்து அழுத பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ.. உருக்கம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டனர். அப்போது பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மோகன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைத்து கதறி அழுதார். அதோடு சட்டசபையில் உள்ள அவரது புகைப்படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கண்கலங்கிய சம்பவம் நடந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று எம்எல்ஏக்களாக பதவியேற்று வருகின்றனர். தற்காலிக சபாநாயகரான சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா முன்னிலையில் சட்டசபையில் ஒவ்வொரு எம்எல்ஏக்களும் பதவியேற்று வருகின்றனர்.

அப்போது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் மோகனை, எம்எல்ஏவாக பதவியேற்க சட்டசபை செயலாளர் சீனிவாசன் அழைத்தார். அவரது தனது வெற்றி சான்றிதழுடன் சபையின் மையப்பகுதிக்கு வந்தார். வெற்றி சான்றிதழை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கி எம்எல்ஏவாக பதவியேற்றார்.
கண்கலங்கிய அதிமுக எம்எல்ஏ
அப்போது மோகன் திடீரென்று கண்கலங்கினார். அப்போது சபையில் இருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவை பார்த்து கையெடுத்து கும்பிட்ட மோகன், ''மாண்புமிகு புரட்சி தலைவர் அம்மா (ஜெயலலிதா) நான் முதலில் வந்து இருக்கிறேன். மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அம்மா எங்களுக்கு நல்லது பண்ணுங்க'' என்று கூறி கண்கலங்கினார். இது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.
முதல் முறை எம்எல்ஏ
இந்த மோகன் அதிமுக சார்பில் முதல் முறையாக எம்எல்ஏவாகி உள்ளார். இவர் பண்ருட்டி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் இதற்கு முன்பும் போட்டியிட முயற்சித்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது முதல் முறையாக கிடைத்த வாய்ப்பில் அவர் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளார். இதனால் அவர் எம்எல்ஏவாக பதவியேற்றபோது மிகவும் எமோஷனானார்.
பண்ருட்டியில் வென்றது எப்படி?
இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மோகன் 78,398 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் அப்துர் ரஹ்மான் 67,735 வாக்குகள் வாங்கி 10,663 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் மணிகண்டன் 56,022 வாக்குகள் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பானுபிரியா 4,884 ஓட்டுகள் வாங்கி 4வதுஇடத்தை பிடித்தார்.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications