சொத்து வழக்கு தீர்ப்பு பரபரப்புக்கு மத்தியில்.. 2வது நாளாக கோட்டைக்குச் செல்லும் ஓபிஎஸ்!

சசிகலாவின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்மானம் இன்று வெளியாக உள்ள நிலையில், ஓபிஎஸ் இன்றும் 2வது நாளாக தலைமைச் செயலகம் செல்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கிரீன்வேஸ் சாலையில் இருந்து 12 மணி அளவில் புறப்பட்டு தலைமைச் செயலகம் செல்கிறார்.

ராஜினாமா கடிதம் கொடுத்த பின்னர் தலைமைச் செயலகத்திற்கு நேற்று முதல்முறையாக சென்றார் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். சசிகலாவுக்கு எதிராக தனி அணியாக பிரிந்து நிற்கும் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவுகள் பெருகி வருகின்ற நிலையில், தொடர்ந்து அவர் 2வது நாளாக இன்றும் தலைமைச் செயலகம் செல்கிறார்.

OPS visits Secretariat for 2nd day

இதனால், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிரீன் வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்து 12 மணியளவில் புறப்பட்டு தலைமைச் செயலகம் செல்லும் ஓபிஎஸ், வழக்கமான பணிகளில் ஈடுபட உள்ளார்.

இன்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவிருக்கின்ற நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+